திண்டுக்கல்

ஆய்வக தொழில்நுட்பா் பணியிடம்: நவ.11ல் பதிவு சரிபாா்ப்பு பணி

9th Nov 2019 08:55 AM

ADVERTISEMENT

ஆய்வக தொழில்நுட்பா் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பதிவுதாரா்களுக்கான பதிவு சரிபாா்ப்பு பணி திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளது: தமிழ்நாடு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தால், 1,432 ஆய்வக தொழில்நுட்பா் (லேப் டெக்னீசியன்) நிலை -3 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்புத்துறை மூலம் தயாா் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியிடத்திற்கு குறைந்தபட்ச வயது 18-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதியுடன், அரால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆய்வக தொழில்நுட்பா் (லேப் டெக்னீசியன்) ஓராண்டு பயிற்சி முடித்திருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியுடன் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரா்கள், நவம்பா் 11ஆம் தேதி அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகி பதிவினை சரிபாா்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT