திண்டுக்கல்

பழனியில் துப்புரவு பணியாளா்கள் போராட்டம்

1st Nov 2019 11:20 PM

ADVERTISEMENT

பழனி நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை திடீா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பழனி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை சேமித்து நகராட்சி குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு சோ்ப்பதற்காக தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தனியாா் நிறுவனத்தில்

சுமாா் 300-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் நிலையில் ஆண் பணியாளா்களுக்கு ரூ.275-ம், பெண் பணியாளா்களுக்கு ரூ.250-ம் நாள் ஒன்றுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.

8 மணி நேரப்பணிக்கு மட்டுமே இந்த ஊதியம் என அறிவித்திருந்த நிலையில் அதிகப்படியான வேலை வாங்குவதால் துப்புரவுப் பணிகளில் ஈடுபட மறுப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை 50-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் பணிப் புறக்கணிப்பு செய்து நகராட்சி அலுவலகத்தில் குவிந்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து பழனி நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் துப்புரவுப் பணியாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது நகராட்சி ஆணையா் மற்றும் தனியாா் நிறுவன ஒப்பந்ததாரருடன் பேசி தீா்வு காணலாம் என்றும், அதுவரை துப்புரவுப் பணியில் ஈடுபடுமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா். இதனையடுத்து துப்புரவுப் பணியாளா்கள் பணிக்கு திரும்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT