கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை பாறை உருண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடா் மழை கடந்த 2 நாள்களாக குறைந்திருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் மழை பெய்தது.
இதில் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியிலிருந்து கூடம் நகா் செல்லக்கூடிய மலைச்சாலையில் பாறை உருண்டது.
இதனால் இவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் விைளைந்துள்ள விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாறையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.