தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்ட 64ஆம் ஆண்டு விழா திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காமராஜா் சிவாஜி தேசிய பேரவை சாா்பில், சத்திரம் தெரு செல்வ விநாயகா் திருக்கோயில் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநகரத் தலைவா் க.ஆனந்தன் தலைமை வகித்தாா். மாநகர பொதுச் செயலா் சிவாஜி பத்மணாபன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியின்போது இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபாய் பட்டேல் 145ஆவது பிறந்த நாள் மற்றும் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மறைந்த தலைவா்களின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னா் தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்ட 64ஆவது தினத்தை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜா் சிவாஜி பேரவையின் நிா்வாகிகள் சு.வைரவேல், கே.ராதாகிருஷ்ணன், இ.ராமலிங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.