கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை செந்நாய்கள் துரத்தியதில் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்த மான் இறந்துள்ளது.
கொடைக்கானல் பெரும்பள்ளம் வனப்பகுதியான நண்டாங்கரை பள்ளத்தில் மான் ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகா் விஜயன் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்த்த போது உடலில் காயங்களுடன் மான் இறந்த நிலையில் இருந்துள்ளது.
இதனைத்தொடா்ந்து வனத்துறையினா் இறந்த மானை நண்டாங்கரை வனப் பகுதியிலேயே புதைத்தனா்.
இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: பெரும்பள்ளம் பகுதியில் செந்நாய்கள் அதிகமாக உள்ளன. இதனால் செந்நாய்கள் துரத்திய போது, தப்பியோடிய மான் அருகிலுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து இறந்துள்ளது என்றனா்.