திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்த வழக்குரைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டுக்கல் ஆா்.எம் காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் தமிழ்செல்வன் (43). இவா் தனியாா் பேருந்தின் உரிமையாளா்.
இவா் வெள்ளிக்கிழமை தனது நண்பரான திண்டுக்கல் கோவிந்தபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ரவிச்சந்திரன் (42) மற்றும் ரமேஷ் (50) ஆகியோருடன் தனக்கு சொந்தமான காரில் ஒட்டன்சத்திரம்-செம்பட்டி சாலையில் ராமாபுரம் அடுத்துள்ள கருப்பிடம் அருகே சென்று கொண்டு இருந்தாா்.
அப்போது எதிரே தேனியில் இருந்து திருப்பூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, காா் மீது மோதியது. அதில் காரில் பயணம் செய்த வழக்குரைஞா் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைத்த தமிழ்செல்வன் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.