திண்டுக்கல்லில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(திண்டுக்கல் மாவட்டப் பிரிவு) சார்பில், மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(திண்டுக்கல் மாவட்டப் பிரிவு) சார்பில், மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் கற்பித்தல் பயிற்சி முகாம், 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
     இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. சௌந்தரராஜன் தெரிவித்துள்ளது:
      கோடை கால விடுமுறையை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மே 4  முதல் 17 ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மே 18  முதல் 31 ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும், ஜூன் 1 முதல் 14 ஆம் தேதி வரை 3ஆவது கட்டமாகவும் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
     நீச்சல் தெரியாதவர்களுக்கான நீச்சல் பயிற்சி வகுப்புகள், நீச்சல் தெரிந்தவர்களுக்கான சிறப்பு நீச்சல் பயிற்சி, உடல் எடை குறைப்பதற்கான நீச்சல் வகுப்பு என 3 நிலைகளில் பயிற்சி அளிக்கப்படும்.
 12 நாள்களுக்கு ரூ.1500 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டும் நீச்சல் கற்றுக்கொள்ளலாம். திங்கள்கிழமை விடுமுறை நாளாகும்.
     இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு சாலை, திண்டுக்கல்- 624004 என்ற முகவரியிலும், 0451-2461162 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com