ஒட்டன்சத்திரத்தில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து புதன்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலர் சி. ராஜாமணி, நகரச் செயலர் ப. வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி. செழியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில், திமுக ஒன்றியச் செயலர்கள் இரா. ஜோதீஸ்வரன், தர்மராஜன், தங்கராஜ், நா. சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர்கள் வீ. கண்ணன், ப. ஆறுமுகம், அன்பு என்ற காதர்பாட்சா என திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.