திண்டுக்கல்

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

29th Jun 2019 08:20 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் பிஎன்சி தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் 24ஆவது ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.  
திண்டுக்கல் ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிஎன்சி அறக்கட்டளைத் தலைவர் டி.கே.லோகநாதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வர்த்தக சங்கத் தலைவர் சி.குப்புசாமி கலந்து கொண்டு,  திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 43  மாணவர்களுக்கு ரூ.2.41 லட்சத்திற்கான உதவித் தொகையினை அறக்கட்டளை சார்பில் வழங்கினார். 
நிகழ்ச்சியில் ஸ்ரீராம
கிருஷ்ணா ஆஸ்ரமத்தின் தலைவர் மஹாராஜ் நித்திய சத்வானந்தாஜி, தொழிலதிபர் பி.நித்யானந்தம், அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.சிவராம், சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்தின் செயலர் மா.வன்னிக்காளை, அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர்.அழகர்சாமி, எஸ்.ஜெயசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT