திண்டுக்கல்

3ஆயிரம் பேருடன் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

22nd Jul 2019 10:02 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 3 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ள நிலையில், தொழில்நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர் எண்ணிக்கையுடன் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காமேஸ்வரி தெரிவித்துள்ளது:  
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் நிலக்கோட்டை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 27.7.2019-ல் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் முதல் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, என்ஜினீயரிங் தொழில்நுட்பத்துறை மற்றும் மெடிக்கல் ஃபாரா மெடிக்கல் உள்ளிட்ட கல்வித் தகுதிகளைக் கொண்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். 
எனவே தனியார் துறை நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு, தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை தேர்வு செய்து கொள்ளலாம். 
முகாமில் கலந்துகொள்ள, வேலையளிப்பவர்கள் தங்களது நிறுவனங்களுக்குத் தேவைப்படக்கூடிய பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதியம் மற்றும் இதர விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கோ (d‌g‌l‌e‌m‌p‌t.‌j‌o​b‌f​a‌i‌r@‌g‌m​a‌i‌l.​c‌o‌m) அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த நிறுவனங்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க முன்னுரிமை அளிக்க முடியும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்: 0451-2461498-ல் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT