திண்டுக்கல்

கொடைக்கானலில் சாலைகள் சீரமைப்புப் பணிகள் தொடக்கம்

18th Jul 2019 01:38 AM

ADVERTISEMENT


கொடைக்கானலில் ரூ. 1.50 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு பணிகள் புதன்கிழமை தொடங்கின.
கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட 24 வார்டுகளில் சாலைகள் சேதமடைந்திருந்தன. இதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலுள்ள சாலைகளை சீரமைப்பதற்கு ரூ. 1 கோடியே 50 லட்சம் செலவில் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில் கொடைக்கானல் செண்பகனூர் பகுதியிலிருந்து பிரகாசபுரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு வரையிலும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.மேலும் இப் பணிகளில் வாய்க்கால்கள் சரி செய்யப்பட்டும், மழைத்தண்ணீர் தேங்காத வரையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதே போல கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தார்ச் சாலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT