பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலைக்கோயிலில் குவிந்தனர். மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும், வின்ச் , ரோப்கார் நிலையங்களிலும் டிக்கெட் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயிலில் அனைத்து தரிசன வரிசைகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதனால் சுவாமி தரிசனத்துக்கு சுமார் 3 மணி நேரமானது. மேலும், இரவு தங்கத்தேர் புறப்பாட்டைக் காண மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் அதிகளவில் கூடியிருந்தனர். தேர் வெளியே வந்தவுடன் "அரோகரா' என கோஷம் எழுப்பினர்.
பழனி பேருந்து நிலையத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்காத நிலையில் பேருந்துகளில் பலரும் முண்டியடித்து ஏறினர்.
வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் பேருந்துகளில் ஏற முடியாமல் சிரமப்பட்டனர்.