கோபால்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரமாக நடந்து சென்ற கூலி தொழிலாளி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள வேம்பார்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோ (45). கூலி தொழிலாளி. திண்டுக்கல் நத்தம் பிரதான சாலையில், கோபால்பட்டி அருகே நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக தங்கசாமி என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் இளங்கோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இளங்கோ, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.