திண்டுக்கல்

விபத்துகள் அதிகரிப்பு: ஆத்தூர் பிரிவில் வேகத்தடை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

4th Jul 2019 07:11 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் அப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
செம்பட்டி வழியாக நிலக்கோட்டையிலிலிருந்து மல்லிலிகை மற்றும் கனகாம்பரம் பூக்களை ஏற்றிக் கொண்டு கோவை விமான நிலையத்திற்கும்,  அதே போல திருப்பூர், கோவையில் உள்ள பனியன் கம்பெனிகளிலிருந்து தூத்துக்குடிக்கும் அதிக வேகத்துடன் லாரிகள் மற்றும் சரக்கு வேன்கள் இவ்வழியாகச் செல்கின்றன. 
செம்பட்டியை அடுத்த எஸ்.பாறைப்பட்டி, ஆர்.வி.எஸ்.கல்லூரி, ஆத்தூர் பிரிவு, செம்பட்டி ரவுண்டானா ஆகிய பகுதிகளில் இவ்வாறு அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இவ்வாறு அதிக வேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், அவற்றின் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செம்பட்டி போலீஸாரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதனால், அப்பகுதியில் உள்ள எஸ்.பாறைப்பட்டி, ஆர்விஎஸ் கல்லூரி, ஆத்தூர் பிரிவு பகுதிகளில் அதிக விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதிகளில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT