தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: சீமான்

தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.


தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் திங்கள்கிழமை பழனிபாபா நினைள நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியது: உயர் ஜாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது தவறு. நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது.  தனியாகவே தேர்தலில் நிற்போம். திராவிட கட்சிகள் ஓட்டுக்கு காசு கொடுக்காமல்  தேர்தலில் எங்களை எதிர்க்க தயாராக இருப்பார்களா?.  முதன்முதலாக தமிழகத்தில் பாரதீய ஜனதாவை அழைத்து வந்தது திமுகதான். இப்போது பாரதீய ஜனதா கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டேன் என்று சொல்வதும் திமுகதான். ஐந்து ஆண்டு காலம் நிறைவடையும் வேளையில், தேர்தல் வரும் போது எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவது ஏற்புடையதல்ல. திமுகளக்கும் அதிமுகளக்கும் வித்தியாசம் இல்லை.  காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகளக்கும் வித்தியாசம் இல்லை.  இருவரும் ஊழல் செய்வதில் நிகரானவர்களே.  மீனவன், விவசாயி, மருத்துவர், செவிலியர்கள், ஆசிரியர், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைவரும் தெருளக்கு வந்து போராடும் போதும் நல்லாட்சி தருவதாக பேசுகிறார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com