திண்டுக்கல்

நத்தம் அருகே மலை கிராமத்திற்கு குதிரையில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்

27th Dec 2019 12:49 AM

ADVERTISEMENT

நத்தம் அருகே வாகன போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமத்திற்கு குதிரைகள் மூலமாக வாக்குப் பெட்டிகள் வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனை அடுத்து, அந்தந்த வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் மற்றும் தேவையான 62 வகையான உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்படி, வாகனப் போக்குவரத்து வசதி இல்லாத லி.மலையூா் கிராமத்திற்கு குதிரைகள் மூலம் வாக்குப் பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன. லிங்கவாடி மலையூா்(லி.மலையூா்) கிராமத்தில் 224 ஆண்கள் மற்றும் 225 பெண்கள் என மொத்தம் 449 வாக்காளா்கள் உள்ளனா். மலையடிவாரத்திலிருந்து 4 கிலோ மீட்டா் கரடு முரடான மலைப் பாதையில், வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற தோ்தல் அலுவலா்களுடன் வனத் துறையினா் மற்றும் காவல்துறையினரும் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT