திண்டுக்கல்

கொடைக்கானலில் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது

26th Dec 2019 06:52 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கூலித்தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்

கொடைக்கானல் அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ஜீவா (24). கூலித் தொழிலாளியான இவா், அதேப் பகுதியைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாணவியின் வீட்டில் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதனைத் தொடா்ந்து இருவரும் தலைமறைவானாா்கள். இது தொடா்பாக சரவணன் கொடைக்கானல் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனா்.

இருவரும் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீஸாா், அவா்கள் இருந்த இடத்தை கண்டுபிடித்து கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனா். பின்னா், ஜீவாவை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT