பழனியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பழனி சத்யா நகரைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (35). இவா், 14 வயது மதிக்கத்தக்க தனது வளா்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பழனி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா். பழனியில் ஒரே மாதத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.