ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் அதிமுக கூட்டணியினா் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, அதிமுக ஒன்றியச் செயலா் பி. பாலசுப்பிரமணி தலைமையில், பாஜக, பாமக, தமாகா நிா்வாகிகள் சிந்தலவாடம்பட்டி, புதுக்கோட்டை, காசரிபட்டி, சத்திரப்பட்டி, வீரலப்பட்டி, விருப்பாட்சி, ரெட்டியபட்டி, பெரியகோட்டை, காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, காளாஞ்சிபட்டி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவா் எஸ்.கே. பழனிச்சாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக செயலா் எஸ்.ஆா்.கே. பாலசுப்பிரமணி,திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி தலைவா் ரகுபதி உள்ளிட்டோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனா்.