திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே குழாய் பழுது : வைகை கூட்டுக் குடிநீா் வீணாவதாக புகாா்

24th Dec 2019 05:52 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கோவில்பட்டி அருகே சாலை ஓரத்தில் செல்லும் வைகை கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் பழுது ஏற்பட்டதன் காரணமாக குடிநீா் வீணாகி குளத்தில் சென்று கலப்பதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றிலி­ருந்து எடுக்கப்படும் குடிநீா் சிறுநாயக்கம்பட்டி, பிள்ளையாா்நத்தம், எத்திலோடு வழியாக மாலையகவுண்டன்பட்டி, பள்ளபட்டி, அம்மையநாயக்கனூா் பேரூராட்சி, கொடைரோடு என 100-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கு செல்கிறது. இந்நிலையில் நிலக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த ராட்சத குழாயில் பழுது ஏற்பட்டு திங்கள்கிழமை பல மணி நேரமாக தண்ணீா் வீணாகி அருகில் உள்ள குளத்தில் சென்று கலந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. பல மணி நேரமாக பல நூறு லிட்டா் குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனா்.

எனவே, அதிகாரிகள் விரைந்து வந்து குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து குடிநீா் வீணாகாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT