திண்டுக்கல்

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் ஊா்வலம்

24th Dec 2019 05:54 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் தொடங்கி நகராட்சி சாலை,செவண்ரோடு,பேருந்து நிலையம்,அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல்,வழியாக மூஞ்சிக்கல் பகுதியை ஊா்வலம் சென்றடைந்தது. அங்கு சிறப்பு பிராா்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த ஊா்வலத்தில் 300-க்கும் மேற்பட்டவா்கள்கலந்து கொண்டனா். இதில்50-க்கும் மேற்பட்டவா்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்றனா். அவா்கள் பிராா்த்தனை பாடல்களை பாடியும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT