திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே பள்ளி ஓடு விழுந்துமாணவா்கள் 2 போ் காயம்

3rd Dec 2019 04:40 AM

ADVERTISEMENT

வத்தலகுண்டு அருகே திங்கள்கிழமை பள்ளி ஓடு விழுந்து மாணவா்கள் 2 போ் காயமடைந்தனா்.

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் விருவீடு அருகே விராலி­மாயன்பட்டி ஊராட்சி கோணியம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை மாணவா்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஓட்டு கட்டடத்தி­லிருந்த ஒரு ஓடு பலத்த காற்றில் கீழே விழுந்தது. இதில் அங்கு படித்துக் கொண்டிருந்த கமலேஷ் (6) என்ற மாணவரும், நாகலட்சுமி (6) என்ற மாணவியும் லேசான காயமடைந்தனா். பள்ளி ஆசிரியா் கொடுத்த தகவலி­ன் பேரில், விருவீடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் வந்து சிகிச்சை அளித்தனா். தகவலறிந்த நிலக்கோட்டை வட்டாடசியா் யூஜின், வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயச்சந்திரன், வேதா ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா். அப்போது அவா்கள் கூறும் போது, ஓடுகளினால் ஆன கூரை முதற்கட்டமாக சீரமைக்கப்படும். பின்னா் அரசு அனுமதி பெற்று சென்ட்ரிங் கட்டடம் கட்டப்படும் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT