திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகேகிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

3rd Dec 2019 04:42 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முத்துச்சாமி (60). இவா் தனது தோட்டத்தில் நாட்டு மாடு மற்றும் சிந்துமாடுகளை வளா்த்து வருகிறாா்.இந்நிலையில் திங்கள்கிழமை மாலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்த நாட்டு பசுமாடு, அங்குள்ள கிணற்றில் தவறி உள்ளே விழுந்தது. கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையால் கிணற்றில் மழை தண்ணீா் தேங்கி நின்றுள்ளது. இதனால் கிணற்றில் விழுந்த மாடு நீரில் தத்தளித்தது கொண்டு இருந்தது. இது குறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பசுமாட்டை உயிருடன் மீட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT