திண்டுக்கல்

ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை: ஜனவரி 5 இல் நுழைவுத் தேர்வு

30th Aug 2019 08:20 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராணுவப்பள்ளியில் (சைனிக்) 6 மற்றும் 9 ஆம்  வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு 2020 ஜனவரி 5 ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. 
 இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  
 திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள அமராவதி நகர் ராணுவப் பள்ளியில் 2020-21 கல்வியாண்டில் 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத் தேர்வு 2020 ஜனவரி 5 ஆம் தேதி  நடைபெறவுள்ளது. 2020 மார்ச் 31ஆம் தேதியன்று, 6 ஆம் வகுப்புக்கு 10 முதல் 12 வயதுடையவர்களாகவும், 9 ஆம் வகுப்புக்கு 13 முதல் 15 வயதுடையவர்களாகவும் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக அரசு மூலம் ஆண்டுக்கு ரூ.50,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 6 ஆம் வகுப்புக்கு 90 இடங்களும், 9 ஆம் வகுப்புக்கு 6 இடங்களும் உள்ளன. படைவீரர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 6 ஆம் வகுப்புக்கான தேர்வை தமிழில் எழுத அமராவதி நகர் மையத்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04252 - 256246, 256206 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT