திண்டுக்கல்

வத்தலகுண்டுவில் மயங்கிக் கிடந்த முதியவர் சாவு

29th Aug 2019 09:01 AM

ADVERTISEMENT

வத்தலக்குண்டுவில் மயங்கி கிடந்து தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவர் யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   வத்தலகுண்டு காளியம்மன் கோயில் அருகே கடந்த 16-ஆம் தேதி 65 வயது மதிக்கத்தக்க வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்த ஒருவர் தனது பெயர் ராமசாமி என்று கூறிக்கொண்டு மூடிய கடை முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருந்தார். மாலையில் அவர் அதே இடத்தில் மயங்கிக் கிடந்தார். தகவல் அறிந்த வத்தலகுண்டு சார்பு- ஆய்வாளர் சேகர், அவரை சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 23-ஆம் தேதி உயிரிழந்தார். வத்தலகுண்டு சார்பு- ஆய்வாளர் இது தொடர்பாக வழக்குப் பதிந்து, அவர் யார் என்று விசாரணை செய்து வருகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT