திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 30) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநர் பிரபாவதி தெரிவித்துள்ளது: படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவும் வகையில், வேலைவாய்ப்பு துறை சார்பில் தனியார் நிறுவனங்களை வரவழைத்து வேலைவாய்ப்பு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை (ஆக. 30) நடைபெறும் முகாமில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் சுய விவரக் குறிப்புடன் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 0451-2461498 என்ற எண்ணில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.