சட்டமேதை அம்பேத்கர் சிலை அவமதிப்பைக் கண்டித்து பழனியில் செவ்வாய்க்கிழமை அனைத்து வழக்குரைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனில் திண்டுக்கல் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அம்பேத்கர் சிலை அவமதிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஜம்பதுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.