திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

28th Aug 2019 09:43 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை ஊராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழனி சார்-ஆட்சியர் உமா முகாமை துவக்கி வைத்து மனுக்களை பெற்றார். இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு திட்டம், குடிமராத்து பணிகள் சரி செய்தல் உள்ளிட்ட  மனுக்கள் பெறப்பட்டன. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் என்.கே.சரவணன், மண்டல துணை வட்டாட்சியர் இரா.ராஜேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்மோகன், வேளாண்மை உதவி அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சக்தி பொன்னுச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
அதேபோல அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, குத்திலுப்பை, ஒடைப்பட்டி, ஜ.வாடிப்பட்டி, நவக்கானி, மண்டவாடி, கொ.கீரனூர் ஆகிய ஊராட்சிகளிலும் முகாம்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT