திண்டுக்கல்

வடமதுரையில் கார் மோதி விபத்தில் முதியவர் பலி

16th Aug 2019 07:01 AM

ADVERTISEMENT

வடமதுரையில் கார் மோதியதில் காயமடைந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை மேற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் வீரச்சாமி (60). வனத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், வடமதுரை சார்-பதிவாளர் அலுவலகம் அருகே புதன்கிழமை சென்றுகொண்டிருந்துள்ளார். 
அப்போது, அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வீரச்சாமியை, திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனை அடுத்து, விபத்தை ஏற்படுத்திய அய்யலூர் அடுத்துள்ள செக்கனூத்துப்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை மீது,  வடமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT