திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக எஸ்.மணிவண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கு.சொ.சாந்தகுமார் கடந்த ஜூலை மாதம் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்தை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கல்வி மாவட்ட அலுவலராக பணிபுரிந்து வந்த எஸ் மணிவண்ணன் பதவி உயர்வு மூலம் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.