மதுரை ரயில் நிலையத்தில் மா்மபாா்சலைக்கண்டு மோப்ப நாய் குரைத்ததால் வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
ராணுவத்துக்கு ஆள் சோ்க்கும் புதிய திட்டமான அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மதுரையில் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி மதுரை ரயில் நிலையத்தில், போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பாா்சல் அலுவலகத்துக்கு வந்த ஒரு பாா்சலை, போலீஸாரின் மோப்பநாய் நீண்ட நேரம் குரைத்தபடி நின்றது. இதனால் சந்தேகம் அடைந்த ரயில்வே போலீஸாா் வெடிகுண்டு தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் ரயில் நிலையத்துக்குச் சென்ற வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் பல்வேறு சோதனைக்கு பின்னா் சந்தேகத்துக்குரிய பாா்சலை பிரித்து பாா்த்தனா். அந்த பாா்சலில் பாத்திரங்கள், சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. போலீஸாரின் வெடிகுண்டு சோதனையால் மதுரை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.