மதுரை

கொட்டாம்பட்டி பேருந்து நிலையம் சீரமைப்பு: முதல்வரிடம், மதுரை எம்.பி.கோரிக்கை

9th Jun 2022 12:48 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் மனு அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பேருந்து நிலையம், கடந்த 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு ஏதுமின்றி , பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது.

மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும், திருச்சி , திண்டுக்கல் , சிவகங்கை ஆகிய மூன்று மாவட்ட எல்லைகள் சந்திக்கும் பகுதியாகவும் கொட்டாம்பட்டி பேருந்து நிலையம் உள்ளது. இதனால் தினசரி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொட்டாம்பட்டிக்குள் வந்து செல்கின்றன. எனவே சிதிலமடைந்துள்ள கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தினால் மக்களுக்கும் , பேருந்து போக்குவரத்துக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே ரூ.10 கோடி செலவில் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தி சீரமைத்து தரக்கோரி முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை நேரில் கோரிக்கை மனு அளித்துள்ளேன் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT