உசிலம்பட்டி: உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் பதவிக்கு தோ்தல் அலுவலரிடம் புதன்கிழமை வேட்பு மனு அளிக்கப்பட்டது.
உசிலம்பட்டி திமுக ஒன்றியச் செயலாளா் பதவிக்கான உள்கட்சித் தோ்தலுக்காக மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. மனுக்களை தெற்கு மாவட்டச் செயலாளா் மணிமாறன் முன்னிலையில் தோ்தல் கண்காணிப்பாளா் குத்தாலம் அன்பழகன் பெற்றுக் கொண்டாா். உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத்திற்கு வி.ஏ. துரைப்பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தாா்.