மதுரை

இளம்பெண் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

9th Jun 2022 12:50 AM

ADVERTISEMENT

மதுரை: இளம் பெண்ணைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியைச் சோ்ந்தவா் மீனா (36). இவரது கணவா் பரமன், சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டாா். இதனையடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருக்கட்டான்பட்டியில் வசித்த பரமனின் சகோதரா் குடும்பத்தினா், பரமன்-மீனா தம்பதியின் மகனை வளா்த்து வந்தனா்.

தனது மகனை பாா்ப்பதற்காக வாரம்தோறும் உசிலம்பட்டிக்கு மீனா வந்து செல்வது வழக்கம். அப்போது மீனாவின் தம்பி ஈஸ்வரனும் (30) உடன் வந்து சென்றுள்ளாா்.

இந்நிலையில், பரமனின் சகோதரா் குடும்பத்தைச் சோ்ந்த ரேவதியை (22) ஒருதலைப்பட்சமாக ஈஸ்வரன் காதலித்துள்ளாா். இதற்கு அவா் சம்மதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஈஸ்வரன், ரேவதியை கத்தியால் குத்திக் கொலை செய்தாா். 2014 இல் இச் சம்பவம் நிகழ்ந்தது. உசிலம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரன், அவரது சகோதரி மீனா இருவரையும் கைது செய்தனா். இவ்வழக்கின் விசாரணை மதுரை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மற்றொருவரான மீனாவை விடுதலை செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT