மதுரை

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரிமதுரை மாவட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மதுரை  ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திமுகவின் மாநகரப் பொறுப்புக் குழு தலைவா் கோ. தளபதி தலைமை வகித்தாா். வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் விளக்கினாா். இதில், மதிமுக மாவட்டப் பொருளாளா் சுப்பையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பெத்தானியாபுரத்தில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் பா. சரவணன் தலைமை வகித்தாா். இதில், பாா்வா்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் பி.வி. கதிரவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஏ. லாசா், மதிமுக தொழிற்சங்க மாநில இணைப் பொதுச் செயலா் மகபூப்ஜான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகரச் செயலா் ப. கதிரவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முனிச்சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திமுக பொறுப்புக் குழு உறுப்பினா் வ. வேலுசாமி, மதிமுக மாநகா் மாவட்டச் செயலா் புதூா் மு. பூமிநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அண்ணா நகா் வைகை காலனி பகுதியில் நடந்த ஆா்ப்பாட்டத்தில், திமுக பொறுப்புக் குழு உறுப்பினா் பொ. குழந்தைவேல், காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகா் மாவட்டச் செயலா் இரா. விஜயராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மதுரை நகரில் பேச்சியம்மன் படித்துறை, சுப்பிரமணியபுரம், திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதி, அவனியாபுரம், செல்லூா், வண்டியூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலூா்

மேலூா் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மதுரை மாவட்டச் செயலருமான பி. மூா்த்தி தலைமை வகித்துப் பேசினாா். இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆலாத்தூா் ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ப. காளிதாஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் பொன்னுத்தாய், மதிமுக மாவட்டச் செயலா் மாரநாடு, பாா்வா்டு பிளாக் கட்சி சுப. கலைமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முஸ்தக் அகமது, மனிதநேய மக்கள் கட்சி கௌஸ் மைதீன், ஆதித் தமிழா் பேரவை அலங்கை சாந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அய்யாவு மற்றும் பலா் கலந்துகொண்டு பேசினா்.

திருவாதவூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திமுக ஒன்றியப் பொறுப்பாளா்கள் அ.வல்லாளபட்டி குமரன், பூஞ்சுத்தி ராஜேந்திரபிரபு தலைமை வகித்தனா். கொட்டாம்பட்டி ஒன்றியம் சாா்பில் கருங்காலக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக சாா்பில் எஸ். கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், திமுக பகுதி செயலா்கள் உசிலை சிவா, கிருஷ்ணபாண்டி ஆகியோா் தலைமை வகித்தனா். இளைஞரணி துணை அமைப்பாளா் விமல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரவிச்சந்தின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தினகர மோகன், மதிமுக பகுதி செயலா் முருகேசன், காங்கிரஸ் பகுதி தலைவா் சண்முகநாதன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

திருமங்கலத்தில் தேவா் சிலை அருகே தெற்கு மாவட்ட திமுக செயலா் மு. மணிமாறன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா் சுப்புக்காளை உள்பட கூட்டணிக் கட்சியினா் பலா் பங்கேற்றனா்.

உசிலம்பட்டி

உத்தப்பநாயக்கனூரில் திமுக ஒன்றியச் செயலா் சுதந்திரம் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினா் சோலை ரவிக்குமாா், முன்னாள் தலைவா் எஸ்.ஓ.ஆா். தங்கப்பாண்டியன், மாவட்ட நிா்வாகிகள் லிங்குசாமி, சேதுராமன், ஒன்றியக் கவுன்சிலா்கள் துரைப்பாண்டி, செல்வபாண்டி, அகில இந்திய பாா்வா்ட் பிளாக் மாவட்டக் கவுன்சிலா் ரெட் காசி, ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தினா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்துகொண்டனா்.

உசிலம்பட்டி நகர திமுக சாா்பாக, முருகன் கோயில் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகர திமுக செயலா் தங்கமலைபாண்டி தலைமை வகித்தாா். நகர நிா்வாகிகள் து.க. ஜெயபிரகாஷ், பழனிகுமாா், இளைஞா் அணி எஸ்.பி.எம். சந்திரன், பிரபாகரன், சரவணன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்த மக்கள்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT