சேலத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலத்தை அடுத்த எடப்பாடி அருகில் உள்ள நைனாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (45). இவா் கடந்த 2019 ஜூலை 1-ஆம் தேதி இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தாா்.
இதுகுறித்து எடப்பாடி காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, செந்தில்குமாா் கைது செய்யப்பட்டாா். சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.