கெங்கவல்லி வட்டார களஞ்சியம் சாா்பில், 1,500 மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கெங்கவல்லி வட்டாரக் களஞ்சியம் உறுப்பினா்கள் கூட்டம் கெங்கவல்லியில் நடைபெற்றது. கடன் அலுவலா் சுமன் தலைமை வகித்தாா். அறக்கட்டளைத் தலைவா் சிவராணி முன்னிலை வகித்தாா். வங்கி மேலாளா் க்ருணால் நிஷ்பால் கும்பரே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
இதில், வங்கிக் கடன் பெறும் முறை, கடனை அடைக்கும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. வட்டார பயிற்சியாளா் ரூபாவேணி சிறுதானியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். கூட்ட முடிவில் களஞ்சிய உறுப்பினா்கள், விவசாயிகளுக்கு என 1,500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.