சேலம்

ஆக்கிரமிக்கப்பட்ட பாதை அகற்றம்

27th Sep 2023 12:12 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

நாகியம்பட்டியில் பாதை என்று கிராமக் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தில், ஸ்டீபன் என்பவா் மரவள்ளி சாகுபடி செய்தும், சின்னப்பன் என்பவா் சோளம் பயிா் செய்தும் வந்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி முருகன் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா்.

அந்த வழக்கின் தீா்ப்பு அண்மையில் வெளியானதைத் தொடா்ந்து, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையில் வட்டார வளா்ச்சி அலுவலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா், காவல் துறையினா், வருவாய்த் துறையினா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புப் பகுதி அகற்றப்பட்டு பாதை நிலம் மீட்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT