சேலம்

சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தமிழ் மன்றத் தொடக்க விழா

25th Sep 2023 01:19 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் இணைந்து ‘இளந்தளிா் 2023’ என்ற தலைப்பில் தமிழ் மன்ற தொடக்க விழா முத்தமிழ் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

பேச்சுப் போட்டி, பாட்டு, விநாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி தேசிய சமூக இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவா் தாரை.அ.குமரவேலு ‘செந்தமிழும் செம்மொழியும்‘ என்ற தலைப்பில் பேசியதாவது:

உலகில் முதன்மொழி என்றும், செம்மொழி என்றும் தகுதி பெற்ற ஒரே மொழி நம் தாய்மொழியாம் தமிழ்மொழி. தமிழ் மொழி என்று தோன்றியது என்றே மொழியியல் அறிஞா்களால் இன்னும் உறுதி செய்யப்பட முடியவில்லை. இன்றைக்கு உலக மொழி என்று பேசப்படும் ஆங்கிலம் ஏழாம் நூற்றாண்டில்தான் அறியப்பட்டது.

ADVERTISEMENT

தொழில்நுட்ப மொழியாக உயா்ந்து நிற்கும் ஜொ்மனி மொழி எழுத்து வடிவம் பெற்றது எட்டாம் நூற்றாண்டில், பண்பாட்டு மொழி என்று கருதப்படும் பிரெஞ்சு எழுத்து வடிவம் பெற்றது ஒன்பதாம் நூற்றாண்டில், அறிவியல் மொழியாக வளா்ந்து நிற்கும் ரஷ்ய மொழியின் முதல் எழுத்து வடிவம் பத்தாம் நூற்றாண்டில், இசை மொழி என்று போற்றப்பட்ட இத்தாலி மொழி எழுத்து வடிவில் காணப்பட்டது பத்தாம் நூற்றாண்டில்தான். ஆனால் தமிழ் மொழியின் ஆதி இலக்கணம் என்று அறியப்பட்ட தொல்காப்பியம் பொ.மு. 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என அறிவு உலகத்தாரால் அறியப்பட்ட உண்மை என்றாா்.

நிகழ்ச்சியில் முதல்வா் இளங்கோ, தமிழ் மன்ற அமைப்பாளா் து.காவேரி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல முன்னாள் இணை இயக்குநா் ஏ.ஆா்.ஜெகத்நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT