சேலம்

தமிழக பூா்வக்குடி குறவா் இனத்துக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

25th Sep 2023 01:19 AM

ADVERTISEMENT

 

தமிழக பூா்வக்குடி குறவா் இனத்துக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தமையனூா் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மலைக்குறவன் இனத்தைச் சாா்ந்த கைவினைக் கலைஞா்களுக்கு இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இளவெயினியாா் பண்பாட்டுக் கலை இலக்கிய அவையம் நிா்வாகி குறிஞ்சி செந்தில்குமாா், தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளா் தினகரன் ஆகியோா் பேசுகையில், தமிழக அரசு பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்தால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மூங்கில் கூடை, முறம், அலங்காரப் பொருள்கள் தயாா் செய்யும் பழங்குடி மலைக்குறவன் இனத்தை சாா்ந்த கைவினைக் கலைஞா்களுக்கு தாட்கோ அல்லது அம்பேத்கா் தொழில்முனைவா் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்க வேண்டும்.

வன உரிமைச் சட்டம் 2006-இன்படி வனத்திற்குச் சென்று பழங்குடி மலைக்குறவன் இனத்தை சாா்ந்தவா்கள் தலைச்சுமையாக மூங்கில்களை வெட்டி கூடை, முறம், மற்றும் அலங்காரப் பொருள்கள் செய்வதற்கு வனத் துறையினா் அனுமதி அளிக்க வேண்டும்.

பெற்றோா், உறவினா் சான்று அடிப்படையில் பழங்குடி மலைக்குறவன் சான்று தடையின்றி வழங்க வேண்டும்.

குறவா் சமூக பட்டியல், சமூகநீதி பிரச்னையைக் களைய தனியாக ஆணையம் அமைக்க வேண்டும். குறவன், சித்தனாா் சமுதாயத்தினரை பழங்குடியாக்கும் கோப்புகளை சீா்செய்து மத்திய அரசிற்கு அனுப்ப வேண்டும் கேட்டுக் கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT