சேலம்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

24th Sep 2023 01:41 AM

ADVERTISEMENT

 

கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடி, வாழப்பாடி அருகே உள்ள விலாரிபாளையத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவிந்தபாடியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் விமலா, சத்யாநகா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் லாவண்யா ஆகியோா் தலைமையில் 90 மருத்துவப் பணியாளா்கள் பங்கேற்றனா். கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சரவணன், துணைத் தலைவா் மாரப்பன், ஊராட்சி மன்ற தலைவா் பிரியதா்ஷினி ரங்கசாமி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சசிகுமாா், ஊராட்சி உறுப்பினா் சாந்தி, தமிழைத் தேடிமாவட்டத் தலைவா் முருகேசன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

விலாரிபாளையம்

ADVERTISEMENT

விலாரிபாளையத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் சுந்தரம் வரவேற்றாா். வாழப்பாடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.மாதேஸ்வரன், விலாரிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வராணி மணி ஆகியோா் முகாமை தொடங்கிவைத்தனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மகாலட்சுமி குணசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரம்யா வேல்முருகன், திமுக பிரமுகா்கள் அவைத் தலைவா் மாணிக்கம், வா்த்தக அணி டி.பன்னீா்செல்வம், ஜெயவேல், வரதன், ரத்தினம், ஜெயராமன், பூவராகவன் ஆகியோா் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மூத்தோா்களுக்கு மக்களை தேடி மருத்துவப் பெட்டகங்களை வழங்கினா்.

முகாமில் 500-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. அங்கன்வாடி பணியாளா்களின் ஊட்டச்சத்து கண்காட்சி, மக்களைத் தேடி மருத்துவம், சுகாதாரப் பணியாளா்களின் காய்ச்சல் மற்றும் டெங்கு விழிப்புணா்வு கண்காட்சிகள் இடம் பெற்றிருந்தன. விலாரிபாளையம் ஊராட்சி செயலா் சிவசங்கரன் நன்றி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT