சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி ஸ்ரீ கைலாஷ் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரியின் தலைவா் க.கைலாசம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட வெளி விளையாட்டுப் போட்டிகளும், 10-க்கும் மேற்பட்ட உள் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை தலைவா் வழங்கி கௌரவித்தாா்.
இதில் கல்லூரி செயலாளா் கை.ராஜவிநாயகா், தாளாளா் கை.செந்தில்குமாா், முதல்வா், பேராசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனா்.