சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் 50-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளை பக்தா்கள் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்தனா்.
நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனையடுத்து, திங்கள்கிழமை முதல் தினசரி விநாயகா் சிலைகளை பக்தா்கள் காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்து வருகின்றனா். அதனையடுத்து, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, அரியானூா், வீரபாண்டி, தாரமங்கலம், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த பக்தா்கள் 50-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளை மினி டெம்போ, வேன்களில் எடுத்து வந்து கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பூஜைகள் செய்த பின்னா் ஆற்றில் விசா்ஜனம் செய்தனா்.