சேலம்

மகளிா் உரிமைத்தொகை திட்ட பிரசார வாகனம் தொடங்கி வைப்பு

22nd Sep 2023 11:51 PM

ADVERTISEMENT

 சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகர திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்ட பிரசார வாகனத்தை சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அண்ணா பிறந்த நாளையொட்டி கடந்த 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதனையடுத்து, இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையப் பகுதியில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்ட பிரசார வாகனத்தை முன்னாள் அமைச்சரும் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி பலூன், புறாவை பறக்கவிட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், இடங்கணசாலை நகரச் செயலாளா் செல்வம், நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் , மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், நகராட்சி துணைத் தலைவா் தளபதி, நகர கழக நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT