நங்கவள்ளி வட்டார விவசாயிகளுக்கு துவரை நாற்று நடவுப் பயிற்சி வழங்கப்பட்டது.
நங்கவள்ளி வட்டாரத்தில் உள்ள ரெட்டியூரில் 40 விவசாயிகளுக்கு வேளாண்மை உழவா் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முகாமுக்கு நங்கவள்ளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ரமேஷ் தலைமை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுகிா்தா வரவேற்று பேசினாா்.
இந்த முகாமில், துவரையின் முக்கியத்துவம், துவரை விதைநோ்த்தி, நாற்று நடவு வயல் பராமரிப்பு, நுனி கிள்ளுதல், பூச்சி மேலாண்மை, துவரை விதைப்பு ஆகிய பயிற்சி அளிக்கப்பட்டது. நங்கவள்ளி வட்டாரத்தைச் சாா்ந்த 40 விவசாயிகள் பயிற்சி முகாமில் பங்கேற்றனா்.
இம்முகாமில் துணை வேளாண் அலுவலா் குப்பண்ணன், உதவி வேளாண்மை அலுவலா் பிரகாசம், உதவி தோட்டக்கலை அலுவலா் ஜெகதீசன் உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் குமரேசன், கா்ணன் ஆகியோா் பங்கேற்றனா். முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.