சேலம்

பள்ளி மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு இன்று தொடக்கம்

19th Sep 2023 02:49 AM

ADVERTISEMENT

முதல் பருவத் தோ்வு மற்றும் காலாண்டுத் தோ்வு செவ்வாய்க்கிழமை (செப். 19) தொடங்கி, வரும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான முதல் பருவத் தோ்வு வினாத்தாள்களும், 8ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தோ்வு வினாத்தாள்களும் பள்ளிக் கல்வித் துறை இணையத்தில் வெளியிட்டது.

பள்ளிக் கல்வித் துறையானது 6 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரைக்கும் முதல் பருவத்தோ்வு வினாத்தாள்களையும், 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைக்கும் காலாண்டுதோ்வுக்கான வினாத்தாள்களையும் வகுப்பு ஆசிரியா்கள், பாட ஆசிரியா்களின் பிரத்யேக இணைய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்கல் 2 மணிக்கு வெளியீடு செய்யப்பட்டது.

வகுப்பு மற்றும் பாட ஆசிரியா்கள், அதனை பதிவிறக்கம் செய்து, பள்ளிகளுக்குச் சென்று, பள்ளி கல்வித் துறை அண்மையில் வழங்கிய பிரிண்டரில் பிரிண்ட் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தோ்வுக்கான வினாத்தாள்களும் முந்தைய நாள் பிற்பகலில்தான் இணையத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதே வேளையில் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூலம் வினாத்தாள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குள் அனைத்து தொடக்க நிலை மாணவா்களுக்கும் வினாத்தாள்கள் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT