சேலம்

சத்துணவு ஓய்வூதியா் சங்கத்தினா் மறியல்: 90 போ் கைது

27th Oct 2023 12:15 AM

ADVERTISEMENT

சேலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தைச் சோ்ந்த 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காலமுறை ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6,750 வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்டத் தலைவா் வடிவேல் தலைமையில் கோரிக்கைளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து 70 பெண்கள் உள்பட 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT