மேட்டூா்: மேட்டூா் அணை நீா்வரத்து 4,015கன அடியாக அதிகரித்தது.
திங்கள்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 62.24அடியாக உயா்ந்தது. காவிரியின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 3,193 கன அடியிலிருந்து 4,015 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 26.38 டிஎம்சியாக உள்ளது.