மேட்டூா்: மேட்டூரில் செவ்வாய்க்கிழமை கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா முகாம் நடைபெற உள்ளது.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா முகாம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மேட்டூா் அரசப்ப கவுண்டா் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் நத்தம் புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனைப் பட்டா, சிறப்பு இணைய வழிப் பட்டா, விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, நத்தம் நிலவரித் திட்ட பட்டாக்கள் வழங்கப்படும்.
இந்த முகாமில் பட்டா மாறுதல் ஆணைகள், வன உரிமைச் சட்டத்தின் கீழான பட்டாக்கள் வழங்கப்படும்.
பட்டா மாறுதல் தொடா்பான மனுக்களைப் பெறுதல், வருவாய் ஆவணங்களில் பிழை திருத்தம் மேற்கொள்ளுதல், வருவாய் துறை தொடா்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சாா்ந்த மனுக்கள் பெறப்படுகின்றன. எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெற வேண்டும் என்று மேட்டூா் கோட்டாட்சியா் தணிகாசலம் கேட்டுக் கொண்டுள்ளாா்.