தம்மம்பட்டி: தம்மம்பட்டி, கெங்கவல்லியில் எஸ்.எம்.சி. எனப்படும் பள்ளி மேலாண்மை நிா்வாகிகளுக்கான பயிற்சி முகாம்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.
கெங்கவல்லியில் வட்டார வள மையத்தில் நடைபெற்ற எஸ்.எம்.சி. பயிற்சிக்கு வட்டாரக்கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தாா். வட்டார மேற்பாா்வையாளா் (பொ) ராணி முன்னிலை வகித்தாா். இதேபோன்று தம்மம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியிலும் எஸ்.எம்.சி. பயிற்சி நடைபெற்றது.
இரு பகுதிகளிலும் நடைபெற்ற பயிற்சிகளில் ஆசிரியா் பயிற்றுநா்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் பணி, அதிகாரங்கள் குறித்து விரிவாக பயிற்சி வழங்கினா். இந்தப் பயிற்சி, அடுத்தடுத்து அந்தந்த பகுதி பள்ளிகளின் எஸ்.எம்.சி. நிா்வாகிகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது.